இந்திய இராணுவத்தை அனுப்பவேண்டும் – சுப்பிரமணிய சுவாமி.. இந்திய இராணுவம் குறித்த செய்திகளை மறுக்கிறோம் – இந்திய உயர்ஸ்தானிகராலயம் |

இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை திட்டவட்டமாக மறுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தொிவித்துள்ளதுடன், அது இந்திய அரசின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போனதல்ல எனவும் கூறியுள்ளது.

இதேவேளை கோட்டாபய மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் சுதந்திரமான தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். “சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் கவிழ்க்க இந்தியா எப்படி அனுமதிக்கும்?  

மேலும் அப்படியானால் நமது சுற்றுப்புறத்தில் உள்ள எந்த ஒரு ஜனநாயக நாடும் பாதுகாப்பாக இருக்காது.  இந்தியாவின் இராணுவ உதவியை ராஜபக்சே விரும்பினால் நாங்கள் வழங்க வேண்டும்” என்று இந்தியாவின் பிரபல அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Recommended For You

About the Author: Editor Elukainews