இலங்கையின் நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்; என சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

இலங்கையின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேற்று இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி, அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகி சர்வகட்சி அரசை அமைப்பதற்கான நகர்வுகளைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையிலேயே சர்வதேச நாணய நிதியம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டங்கள் தொடர்பான பேச்சுக்களை தொடர்வதன் ஊடாக தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் குறிப்பாக ஏழைகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்’ எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கைக்கான உதவிகள் தொடர்பில் நிதியமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் தொடரும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews