விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு கோரிக்கை.இராணுவ தளபதி…!

மிக பொய்யான பேச்சுக்களை நம்பாமல் மக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

மேலும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவு படுத்தியிருக்கிறது. மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் 75 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு செலுத்துகையை பெற்றுக்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews