சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற இலங்கைக்கு நிபந்தனை விதித்த அமெரிக்கா.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி கிடைக்கப் பெற வேண்டுமாயின், இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என, வெளிநாட்டு உறவுகள் தொடர்பான செனட் குழு தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, மத்திய வங்கியின் சுதந்திரம், ஊழலை ஒழிப்பதற்கு வலுவான நடவடிக்கைகள் எடுத்தல், சட்டத்தின் ஆட்சியை பாதுகாத்தல் என்பன பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரமே இலங்கையுடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என குறித்த குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த குழுவின் அதிகாரியினால் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், கட்டுப்பாடற்ற கடன்சுமை மற்றும் மோசமான பொருளாதார நிர்வாகத்தால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

“இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதுடன், ஊழல் அபாயத்தை எதிர்ப்பதற்கு புதிய சீர்திருத்தங்களைச் சேர்ப்பதாதே சர்வதேச நாணய நிதியத்தின் புதிய வேலைத்திட்டத்தின் நோக்கம்” என சர்வதேச நாணய நிதியம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த பதிவிற்கு பதிலாளித்த அமெரிக்க செனட்டின் வெளிநாட்டு உறவுகள் குழு, அந்த முக்கிய நடவடிக்கையை எடுக்காமல், கட்டுப்பாடற்ற கடன் மற்றும் மோசமான பொருளாதார நிர்வாகத்தால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews