கோவிட் மரணங்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும்! சஜித் –

நாட்டில் நாள்தோறும் பதிவாகி வரும் கோவிட் மரணங்களுக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோவிட் பெருந்தொற்று தீவிரமடைவதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகளே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நோய்த் தொற்று பரவவில்லை எனவும், அரசாங்கத்தின் எல்லைமீறிய நடவடிக்கைகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நொடிக்கு நொடி அரசாங்கம் தனது மனிதாபிமானமற்ற முகத்தை காண்பித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு துரோகம் இழைக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்தே மக்கள் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews