இந்தியா யாழ்ப்பாணம் கடல் மற்றும் ஆகாய போக்குவரத்தை ஆரம்பிக்க அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வு..

இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க  பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் இன்று  சனிக்கிழமை நேரில் ஆராய்ந்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து குறித்த பகுதிகளின் கள ஆய்வை மேற்கொள்ள  கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கடுகதி புகையிரதத்தில் வருகைதந்திருந்த துறைசார் அமைச்சரான நிமால் சிறிபால டி சில்வா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பொன்னாடை போர்த்தி வரவேற்றிருந்தார்.
இதையடுத்து குறித்த இரு அமைச்சர்களும் குறித்த பகுதிகளுக்கான கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். முன்பதாக இந்தியாவின் பாண்டிச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து மற்றும் பலாலி – திருச்சி இடையிலான விமானப் போக்குவரத்து போன்றவற்றை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறுதியாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயத்தினை பிரஸ்தாபித்திருந்தார்.
இதையடுத்து குறித்த செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவையில் ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த போக்குவரத்துக்களை செயற்படுத்துவதற்கான கள ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைய துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து காங்கேசன்துறை மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்ட குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews