பருத்தித்துறை நகரில் போராட்டம்….!

பருத்தித்துறை பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் அதிபர்கள்,  ஆசிரியர்கள் போன்றோரை கலந்து கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வடமராட்சி கல்வி வலய செயலாளர் சு.யசீலன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
வடமாகாணத்தைச் சேர்ந்த, வடமராட்சி வலயங்களைச் சேர்ந்த அன்பான அதிபர்கள்,ஆசிரியர்களே
எதிர்வரும் திங்கட் கிழமை 09-08-2021 ம் திகதி  சம்பள உயர்வு தொடர்பான பாரியளவிலான போராட்டம் ஒன்று யாழ்/ பருத்தித்துறை பஸ் நிலையத்திற்கு முன்பாக காலை 10.30 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஆட்பாட்டம் வெற்றியளிக்க வடமாகாணத்தைச் சேர்ந்த மற்றும் குறிப்பாக வடமராட்சி வலயங்களைச் சேந்த அதிபர்கள், ஆசிரியர்களே உங்களது ஆதரவுகளை முழுமையாக வழங்கி போராட்டம் வெற்றியடைய உதவி செய்யுங்கள். உங்களுக்கு தெரியும் இப் போராட்டம் மாகாண,தேசிய ரீதியாக நடைபெற்று வருகின்றது. அத்தோடு தற்போது இப்போராட்டமானது அனைத்து வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது. அதற்கு அந்தந்த வலயங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பூரண ஒத்துளைப்புகளை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் மன்னார் வலயத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 500க்கு மேற்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்ததனை அவதானித்து இருப்பீர்கள். எனவே அன்பான அதிபர்கள், ஆசிரியர்களே அதை விட எமது வலயம் சார்பாக நாமும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டி உள்ளது அதற்கமைய நீங்கள் அனைவரும் வரும்
திங்கட்கிழமை உங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வடமராட்சி ஆசிரியர் சேவைச் சங்கத்தின் வலயச் செயலாளர் என்ற வகையில் அனைவரையும் அன்பாக ஆழைத்து நிற்கின்றேன். இதற்கு ஏனைய சங்கங்களும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது. எனவே அன்பானவர்களே! எமது உரிமைகளை வென்று எடுக்க கட்சி பேதம் ,சங்க வேற்றுமை காட்டாது ஒன்று படுங்கள்.”ஒன்று பட்டால் உண்டு  வாழ்வு” என்பதற்கமைய அணி திரளுங்கள். யாரும் இதற்கு அஞ்ச வேண்டிய தேவை இல்லை. காரணம் ஜனாதிபதி அவர்கள் பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்கள் தங்களது உரிமைகளை வேண்டி போராட்டம் செய்ய அவர்களுக்கு உரிமையுண்டு அந்த வகையில் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் ஆசிரியர்களை அச்சுறுத்தவோ,கைது செய்யவோ வேண்டாம் எனவும் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். அது சம்பந்தமான செய்தி நேற்றைய தினம் பத்திரிகைகள் மற்றும இணையங்களில் செய்திகள் பிரசுரமாகி இருந்ததை அனைவரும் அவதானித்து இருப்பீர்கள் எனவே நீங்கள் அதற்கு அஞ்சத்தேவையில்லை எனவே நீங்கள் அனைவரும் சுயமாக சிந்தித்து திங்கட் கிழமை நடை பெறும் போராட்டத்தில் கலந்தது கொள்ளுங்கள் யாருர் போராடியும் சம்பள உயர்வு கிடைத்தால் அதை நாம் அனுபவிக்கலாம் என்ற சிந்தனைகளை தயவு செய்து உங்கள் எண்ணங்களிலிருந்து இல்லாமல் செய்து நீங்களும் பங்குதாரராகி ஒரு அரை மணி நேரம் இதற்காக ஒதுக்கி கொள்ளுங்கள். அன்பானவர்களே! வெட்கமான விடயம் எங்கள் சகோதர மொழி ஆசிரியர்கள் ஆண்,பெண் என்ற வேறுபாடு இன்றி தென்னிலங்கையில் முழுமையான ஆதரவுகளை வழங்குவதை உங்களால் அவதானிக்க முடிந்திருக்கும். இது தமிழ் ஆசிரியர்களாகிய எங்களுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பந்தமான செய்தி நேற்றைய தினம் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது.உண்மைதான் நாம்  எந்த விதத்திலும் ஆதரவு வழங்குவது குறைவு ஆகையால்  இந்த முறையாவது தழிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு எமது ஆதரவையும் வெளியுலகம் அறிந்து கொள்ள கட்டாயம் தவறாது இணைந்து கொள்ளுங்கள். இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று வியாழங்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதிலும் இணைந்து கொள்ள விரும்புவர்கள் எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.இதில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பாக இருக்கும் என்பதனை அறியத்தருகிறேன் என
இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம்
வடமராட்சி வலயச் செயலாளர் சு.யசீலன் (T.P-0776404310) அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews