80 கோடி ரூபாய் நிவாரண பொருட்களுடன் தமிழகத்திலிருந்து இலங்கை வருகிறது கப்பல்..!

இலங்கை மக்களுக்கான சுமார் 80 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்களுடன் இந்திய கப்பல் இலங்கையை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த நிவாரண கப்பலை நேற்று மாலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து கொடி அசைத்து வழியனுப்பியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள்,

மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.

இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் நேற்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

இதன்படி தமிழகத்தில் இருந்து 80 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 டன் பால் பவுடர்,

28 கோடி ரூபாய் மதிப்பிலான 137 வகையான உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் அடங்கிய கப்பலே இவ்வாறு இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews