அம்பாறை நாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.

 அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 5ஆம் நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன.

இதன்போது,இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து இறை வணக்கம் செய்யப்பட்டதுடன்,முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கவிந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்; பா.அரியநேந்திரன் , கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் ,நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் மகளீர் அணி தலைவி என்.தேவமணி,ஆலையடிவேம்பு தமிழரசுக்கட்சியின் தலைவர் ஜெகநாதன்,உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews