இனப் படுகொலை சித்திரங்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வராத்தின் ஆறாம் நாள் நினைவேந்தல் நேற்று புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இனப்படுகொலையை நினைவுறுத்தும் சித்திரங்களும் காட்சிபடுத்தப்பட்ட  நிலையில் முள்ளிவாய்க்கால்  கஞ்சியும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் முன்பாக காய்ச்சப்பட்டது.
 பல்கலைக்கழக நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைச்சுடரேற்றி ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது .இதனையடுத்து முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியால் நினைவுப்பகிர்வு முன்னெடுக்கப்பட்டு பல்கலைக்கழக வளாகத்தினுள்ளும் பல்கலையின் வெளியே ராமநாதன் வீதியில் பொதுமக்களுக்கும் மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது யாழ் பல்கலைக்கழக சிங்கள தமிழ் மாணவர்களும் ,ஊழியர்கள்,விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.75

Recommended For You

About the Author: Editor Elukainews