கோப்பாய் பிரதேச செயலகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட செயலமர்வு.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் Centre for Children’s Happiness(CCH) நிறுவனத்தின் அனுசரணையுடன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும், சிறார்களின் ஆளுமை விருத்தியும் மற்றும் புத்தாக்கமும் எனும் கருப்பொருளில் செயலமர்வு பிரதேச செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண CCH நிறுவன நிறைவேற்று அதிகாரி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் வளவாளராக லின்டா ரோஸ் (UK) அவர்கள் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், Centre for Childrens’ Happiness நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews