புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சீன பிரஜை உட்பட இருவர் உயிரிழப்பு.

இருவேறு பிரதேசங்களில் இடம்பெற்ற இரு விபத்துக்களில் சீன பிரஜை உள்ளிட்டட இருவர் மரணமடைந்துள்ளனர்.

புத்தளம் கல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்பிட்டிய வீதி கிரிஞ்சமிட்டிய பிரதேசத்தில் கல்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்த காரின் சாரதி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

சீன பிரஜையான 44 வயது நபரே இவ்வாறு மரணமடைந்தார்.

பிரேதப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹகல வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது ஓட்டோவொன்று மோதியதில் நால்வர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் மரணமடைந்தார்.

பொலன்னறுவை, பராக்கிராம வீதியை சேர்ந்த 84 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஐவர் பயணித்துள்ளனர் என்றும் இவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews