முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க செல்வோருக்கு விசேட பேருந்து சேவை

தமிழினப் படுகொலை நினைவுதினமான 18 (புதன்கிழமை) அன்று, கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு விஷேட பேருந்துகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன அழிப்பின் சாட்சியங்களாக, தாம் இழந்துபோன உறவுகளை நினைந்துருகத் தவிக்கும் பொதுமக்கள் , கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடைவதற்குரிய போக்குவரத்து ஏற்பாடுகள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையினரால் கீழ்வரும் ஒழுங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டிக்க செல்வோருக்கு விசேட பேருந்து சேவை

1. காலை 8.00 மணிக்கு முழங்காவிலில் இருந்து புறப்படும் பேருந்து வாடியடி, பரந்தன் ஊடாகவும்

2.காலை 8.30 மணிக்கு, பளை நகரில் அமைந்துள்ள தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேச அலுவலகத்திலிருந்து புறப்படும் பேருந்து புதுக்காடு, இயக்கச்சி, பரந்தன் ஊடாகவும்

3.காலை 9.00 மணிக்கு பரந்தன் சந்தியிலிருந்து புறப்படும் பேருந்து முரசுமோட்டை, கண்டாவளை, புன்னைநீராவி ஊடாகவும்

4.காலை 9.00 மணிக்கு வட்டக்கச்சி சந்தையடியிலிருந்து புறப்படும் பேருந்து புளியம்பொக்கணைச் சந்தி ஊடாகவும்

5.காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக உள்ள, தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து புறப்படும் பேருந்து கரடிப்போக்கு, பரந்தன் ஊடாகவும்

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தைச் சென்றடைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவுற்றதும் அதே வழித்தடத்தின் ஊடாக மீளத் திரும்பவுள்ளன.

நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள்,மேற்படி பேருந்துகளைப் பயன்படுத்தி, தங்களின் போக்குவரத்து இடையூறுகளைத் தவிர்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews