மகிந்த குடும்பத்தை கலங்கடித்த கோட்டாபயவின் முக்கிய வியூகம்.

மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவை குறிவைத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்துள்ளதாக பிரித்தானிய வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.

ஊடக  நிகழ்ச்சியி ஒன்றில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேலும், மகா சங்கத்தினரின் திட்டத்திற்கமைய உடனடியாக மகிந்த ராஜபக்சவை கோட்டாபய ராஜபக்ச வரவழைத்து குடும்பத்தினருடன் கலந்துரையாடி பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவித்த காரணத்தினால் கோபமடைந்த மகிந்த உடனடியாக பதவி விலகி தனது கோபத்தை குண்டர்களை வைத்து வன்முறையாக மாற்றி தீர்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவின் இருப்பை தக்கவைக்க, அவரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்ற கவலையில் மகிந்த இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews