எரிவாயு கோரி கொழும்பு மட்டக்குளி வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம்.!

கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் எரிவாயு கோரி பிரதேச மக்கள் இன்று (14) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்குளி பாம்வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவ்வீதி வழியான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகனசாரதிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

எரிவாயு சிலிண்டர்களை வீதியின் குறுக்கே அடுக்கி வைத்தும் வாகனங்களை நிறுத்தியும் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்ட இடத்துக்கு பொலிஸார் வருகை தந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

எரிவாயு கிடைக்கும்வரை தாம் குறித்த இடத்திலிருந்து செல்லப்போவது இல்லை என்றும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews