வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றையதினம் வவுனியா மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியா ஆலடி பிள்ளையார் கோவிலடியில் இடம்பெற்ற நிகழ்வில், முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து இச்செயற்பாட்டை முன்னெடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை அக்கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் மற்றும் வீதியால் சென்றோருக்கு கஞ்சி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews