நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நாளடாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், இன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டது.
தொடர்ந்து பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம், நாளை காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews