மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை.

நேற்று மாலை (12-05-2022) ஊரடங்கு காலப்பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு என எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை (PHOTOS)

நேறு்று வியாழக்கிழமை(12) மாலை 2 மணியுடன் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சிலருக்கு மாலை அவசர நிலையை கருத்தில் கொண்டு வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் காலை முழுவதும் காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் மாலை நேரம் எரிபொருள் பெற முயன்ற போது, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை (PHOTOS)

சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாகவும், நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிக விலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குவதாகவும் கூறி மக்கள் முரண்பட்டுள்ளனர்.

மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை (PHOTOS)

இதன்போது  சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews