நெருக்கடிகளை தீர்ப்பதற்கான முதற்படியே ரணிலின் நியமனம்: அமெரிக்கா வாழ்த்து.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமையானது அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்கி நெருக்கடியை தீர்க்கும் முதல் படி என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜலி சங் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமராக ரணிலின் நியமனம், மற்றும் சர்வகட்சி அரசை விரைவாக உருவாக்குவது  ஆகியவை நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படிகளாகும். அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews