வெற்றிலைக்கேணியில் புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம், குடும்ப தகராறே கொலைக்கு காரணம் என சந்தேகம்…..?

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு  வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப் பட்டுள்ளதாக சந்தேகத்தின் பெயரில் குறித்த  இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்துள்ளதாகவும் நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்க்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில்  இராசன் சிவஞானம்  எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுவதுடன்
இது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றிருக்காலம் எனவும்,
குறித்த கொலையுடன் சம்மந்தப் பட்டிருக்கலாம் என்றும் சந்தேக நபரை கைது செய்வதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்  மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews