யாழில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு! –

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருநகர் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் தமிழகம் , தனுஷ்கோடியை அண்மித்த தொண்டி பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை தமிழக கடலோர பாதுகாப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்கு தஞ்சம் கோரி வந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது , குறித்த இருவருக்கும் எதிராக இலங்கை நீதிமன்றில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் இருவரையும் அகதிகளாக ஏற்காமல் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews