பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு..! சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 4 பொலிஸார் கைது,

கேகாலை – ரம்புக்கணை பகுதியில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்ற கட்டளைக்கமைவாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன உள்ளிட்ட 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய பொலிஸ் குழுவில் அங்கம் வகித்த மூன்று கான்ஸ்டபிள்களையும், கண்டி – குண்டசாலை பகுதிக்கு சென்ற சி.ஐ.டி. சிறப்புக் குழுவினர் நேற்று இரவு கைது செய்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான குழுவினர், துப்பாக்கிச் சூட்டை நடாத்த கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை கைது செய்திருந்ததுடன்,

பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினர் ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களைக் கைது செய்திருந்தனர். நேற்றுமுன்தினம் ( 27), துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரியையும்,

அந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து மன்றில் ஆஜர் செய்ய கேகாலை நீதிவான் நீதிமன்றம் வாசனா நவரட்ன பொலிஸ் மா அதிபருக்கு உத்தர்விட்டிருந்தார்.

அந்த நீதிமன்ற உத்தரவு நேற்று ( 28) பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்ததாக வீரகேசரியிடம் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ,

அந்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமுல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறினார். இந் நிலையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews