அம்பாறையில் உழவுவேலைகள் ஆரம்பம்-எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் செலவுகள் அதிகரிப்பு |

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளதுடன்  அதற்கான செலவுகளும் பாரியஅளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் ,சம்மாந்துறை, கல்முனை ,நாவிதன்வெளி  , நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம்   ஆகிய  பிரதேசங்களிலுள்ள  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைவாக உழவு வேலைக்கென பிரத்தியேக வரிசையில்  வைத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் டீசல் நிரப்பப்படுகின்றன.அத்துடன்  உழவு வேலைகளுக்கான கூலிகளும் பரவலாக அதிகரித்துள்ளன.

ஒரு ஏக்கர் உழவுவதற்கு உழவு இயந்திரத்திற்கான கூலி 7000 ருபாவிலிருந்து 13000ருபாவாக அதிகரித்துள்ளது.1லீற்றர் டீசல் 340 ருபாவாக அதிகரித்துள்ளமையே இதற்குக்காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பல உழவு இயந்திர உரிமையாளர்கள்  டீசல் பிரச்சினையால் உழவமுடியாது என்கிறார்கள்.அதனால் இன்னும் உழவமுடியாது பல விவசாயிகள் திண்டாட்டத்திலுள்ளனர்.

மேலும் விதைப்பதற்கான கூலி 1500 ருபாவிலிருந்து 2000 ருபாவாக அதிகரித்துள்ள அதேவேளை வரம்பு கட்டுவதற்கான கூலி 2000 ருபாவிலிருந்து 2500 ருபாவாக அதிகரித்துள்ளது.

1 புசல் விதைநெல்லுக்கு 1000ருபாவால் கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த தடவையைப்போல இரசாயனப்பசளை இம்முறையும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் விவசாயிகள் விதைப்பினை ஆரம்பித்துள்ளனர். எனினும் கடந்த தடவை பசளை மாபியாக்கள்  கறுப்பு சந்தையினுடாக   1 மூடை யூரியாவினை  விவசாயிகளுக்கு   35 ஆயிரம் முதல் 44 ரூபா வரை  விற்பனை செய்திருந்தனர்.அதே வேளை குறித்த  யூரியா இட்டு நெற்செய்கையில் ஈடுபட்டவர்களின்  விளைச்சல் அதிகமாகவிருந்தது.கூடவே நெல்லின் விலையும் ஒரு மூடை 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை  அதிகரித்தமையினால் கூடிய இலாபம் பெற்றனர். ஆனால் யூறியா இம்முறை 50ஆயிரம் ரூபா வரை மாபியாக்களின் செயற்பாட்டினால் கறுப்பு சந்தையில் கிடைப்பதாக

Recommended For You

About the Author: Editor Elukainews