மண்ணெண்ணை வாங்க 5 மணித்தியாலம் காத்திருந்தவர் வீட்டுக்கு வந்து வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய நிலையில் மரணம்..!

வீட்டுக்கு தேவையான மண்ணெண்ணை வாங்குவதற்காக 5 மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்தவர் வீட்டுக்கு சென்று வாந்தி எடுத்துவிட்டு உறங்கிய வர்த்தகர் ஒருவர் உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான தேவநாயகம் கிருஸ்ணசாமி, 

ஹட்டன் நகரில் வாடகைக்கு கடையொன்றை பெற்று வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த நபர், நேற்று (26) மாலை 5 மணியளவில் மண்ணெண்ணையைப் பெறுவதற்காக, எரிபொருள் நிலையத்துக்கு சென்று,

சுமார் இரவு 11 மணியளவில் வீட்டுக்கு வருகைத் தந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.வீட்டுக்கு வந்த அவர், தனக்கு அதிகம் சோர்வாக இருப்பதாக தெரிவித்து, வாந்தியும் எடுத்துள்ளதுடன், நித்திரைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகாலை தனது கணவர் நித்திரையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள அவரது மனைவி, இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என்றும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக

பல மணி நேரம் காத்திருந்தமையாலேயே தனது கணவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews