தெருநாய் கடிக்கு இலக்கான குடும்பஸ்த்தர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!

நாய் கடிக்கு இலக்காகி நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த சபாரத்தினம் கனகலிங்கம் (வயது 50) என்பவரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 16ம் திகதி குறித்த குடும்பஸ்த்தரை தெருநாய் கடித்துள்ளது.

இதனையடுத்து மறுநாள் அவர் பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்கு சென்றிருக்கின்றார். இதன்போது அவருக்கு மருத்துவ ஆலோசனை பிரகாரம் ஏற்பூசியே வழங்கப்பட்டுள்ளது.

நீர்வெறுப்பு நோய் தடுப்பூசி வழங்கப்படவில்லை என்பது விசாரணைகளில் தொியவந்துள்ளது. இந்நிலையில் திடீர் சுகயீனமடைந்த குறித்த நபர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

சில மணிநேர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளார். மரண விசாரணையினை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews