பொதுமக்களை கட்டுப்படுத்த குறைந்தபட்ச பலத்தை பிரயோகித்திருக்கவேண்டும்..! ஜ.நா இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கவலை… |

கேகாலை மாவட்டம் – ரம்புக்கணை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதிர்ப்பாளர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து கவலையடடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தரப்பினரும் வன்முறையைப் பயன்படுத்துவது அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களைப் பாதுகாக்க குறைந்தபட்ச பலத்தை பயன்படுத்துவது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தங்கள் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை இதனூடாக பாதுகாக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews