நெடுங்கேணியில் விபத்தில் சிக்கியவர் யாழ்ப்பாணத்தில் மரணம்!

நெடுங்கேணியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

17ஆம் கட்டை, நெடுங்கேணி என்ற முகவரியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமானார்.

இவர் கடந்த 10ஆம் திகதி, மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானார்.

படுகாயமடைந்த அவர் நெடுங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி மரணமானார்.

Recommended For You

About the Author: Editor Elukainews