ஹட்டன்-டிக்கோயா நகரங்களிலும் பாரிய ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் டயர்களை எரித்து, வீதியினை மறித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுபாடு நிலவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று காலையில் இருந்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரப்பகுதியில் இளைஞர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியினை மறித்தும், டயர்களை எரித்தும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது வருகிறது.
இதனால் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதி மற்றும் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – நுவரெலியா ஆகிய வீதிகளின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews