யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் வேதியியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் இயற்கை எய்தினார்.. |

யாழ்.பல்கலைகழக உயிர் வேதியியல் துறைத் தலைவரும், மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் உயிரிழந்துள்ளார்.

யாழ்.உடுப்பிட்டியை சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவராவார்.

மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக இருந்தபோது கலையரங்கம் மற்றும் பரீட்சை மண்டபம் உள்ளிட்ட பல வசதிகளை பெற்றுக் கொடுத்தார்.

இவருடைய இறப்பு மருத்துவத்துறைக்கு போிழப்பு என விபரிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews