ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் சிறார்களுக்கு நேர்ந்த கொடூரம்: உண்மையை அம்பலப்படுத்திய பிரித்தானிய வீரர்.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகாமையில் ரஷ்ய துருப்புகளால் சிறார்களுக்கு எற்பட்ட கொடூரம் தொடர்பில் பிரித்தானிய வீரர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அழைப்பை ஏற்று உக்ரைன் சென்றவர் முன்னாள் பிரித்தானிய இராணுவ ஸ்னைப்பரான ஷேன் மேத்யூ என்பவரே இவ்வாறு ரஷ்ய துருப்புகளின் செயலை அம்பலப்படுத்தியுள்ளார்.

34 வயதான ஷேன் மேத்யூ கடந்த ஒரு மாத காலமாக உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போர்க்களத்தில் உள்ள நிலையில் .தனை தெரிவித்துள்ளார்.

ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ள தமக்கு, உக்ரைன் நிலவரம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், உக்ரைன் தெருக்களில் சடலங்கள் மட்டுமே காணப்பட்டதாகவும், சிறார்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு, தலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிரியாவில் கூட ரஷ்ய துருப்புகள் இதுபோன்றதொரு கொடூரத்தை நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இனி, உக்ரைன் தெருக்களில் ரஷ்ய துருப்புகளின் அட்டூழியத்தை படம் பிடித்து அம்பலப்படுத்துவேன் எனவும்,இன்னும் சில வாரங்களில் உக்ரைன் திரும்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews