பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தான் யாசகமாக பெற்ற 20 ஆயிரம் ரூபாயை நன்கொடை வழங்கிய தமிழக யாசகர்..!

தமிழகம் – தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற யாசகர் தான் யாசகம் பெற்று சேகரித்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி – ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார். 

கொரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து 10,000 ரூபாயை பல முறை மதுரை மாவட்டத்திற்கு நிவாரணமாக வழங்கி வந்தார்.

தனது சேவை காரணமாக பொதுமக்களால் யாசகர் பூல்பாண்டியன் பாராட்டப்பட்டு வருகிறார். இதுவரை 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையை கோரோனா நிவாரண நிதியாக பூல்பாண்டி வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இலங்கை மக்களுக்கு உதவுமாறு தான் யாசகம் பெற்று சேமித்து வைத்த 20,000 ரூபாய் பணத்தை

மதுரை மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் பூல்பாண்டி வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews