கோப்பாய் போலீசாருக்கு எதிராக நான்கு முறைப்பாடு….!

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக 7 நாட்களில் 4 முறைப்பாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

கோப்பாய் பொலிஸார் இளைஞன் ஒருவனை வாகனத்தில் கடத்தி சென்று தாக்கி சித்திரவதை செய்ததுடன் வீதியில் வீசிய சம்பவம் தொடர்பில்

நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேற்படி 4 முறைப்பாடுகள் பதியப்பட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதேவேளை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தினால் குறித்த நான்கு முறைப்பாடுகள் தொடர்பாக  விளக்கங்கள் கோரப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ள போதிலும் , கோப்பாய் பொலிசாரின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews