ஊர்காவற்துறை வைத்தியசாலை ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம்!

கோட்டாபய அரசிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றையதினம் ஊர்காவற்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு “மருந்துக் தட்டுப்பாட்டை நீக்கு, உயிர் தியாகம் செய்ய வைக்காதே, நோயாளிகளை காப்பாற்று என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews