யாழ்.நகரில் அரசுக்கு எதிரான போராட்டத்தை குழப்ப அரசுக்கு ஆதரவாக கோஷமிட்டவர்களுக்கு செருப்படி..!

யாழ்.நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கைப்பில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில்,

அதனை குழப்பும் வகையில் அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியோர் மீது செருப்படி விழுந்துள்ளது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு ஐனாதிபதிக்கு ஆதரவாக  ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.

முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் ஏற்பட்டு அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவர் மீது செருப்படியும் விழுந்துள்ளது இந்நிலையில் பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உமாச் சந்திர பிரகாஷ் உள்ளிட்ட கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews