இன்று 12 மணிநேரம் மின்வெட்டு அமுலாகும்! –

இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் 12 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி இன்றையதினம், ஏ, பி, சி, டி, ஈ, எவ் வலயங்களில் அதிகாலை 4 மணி தொடக்கம் காலை 6 மணி வரையும், காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையும் தொடர்ந்து பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் மின்வெட்டு நடைமுறையிலிருக்கும்.

ஜி, எச், ஐ, ஜே, கே, எல் வலய பகுதிகளில் காலை 6 தொடக்கம் 8 வரையும், பின்னர் நண்பகல் 12 தொடக்கம் பிற்பகல் 4 மணி வரையும், தொடர்ந்து மாலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையும் மின்வெட்டு அமுலாகும்.

இதேபோன்று வடக்கு மாகாணத்தின் வலயங்களான பி, கியூ, ஆர், எஸ், ரி, யூ, வி, டபிள்யூ வலயங்களில்,

பி, கியூ, ஆர், எஸ் வலய பகுதிகளில் அதிகாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரையும் பின்னர், காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையும், தொடர்ந்து பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும் மின்வெட்டு நடைமுறைக்கு வரும்.

இதேபோல, ரி, யூ, வி, டபிள்யூ வலய பிரதேசங்களில் காலை 6 தொடக்கம் 8 மணி வரையிலும், பின்னர் நண்பகல் 12 தொடக்கம் 4 மணி வரையிலும், தொடர்ந்து மாலை 6 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரையிலும் மின்சாரம் தடைப்படும்.

இவை தவிர, எம், என், ஓ, எக்ஸ், வை, சற் பகுதிகளில் காலை 5.30 மணி தொடக்கம் காலை 9 மணி வரையிலும் பின்னர் பிற்பகல் 4 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையிலும் மின்சாரம் நிறுத்தப்படும் அதேவேளை, கொழும்பு நீர்ப்பாசன பிரதேசமான சிசி வலயத்தில் காலை 6 மணி தொடக்கம் காலை 9.30 மணி வரையில் மின்சாரம் தடைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews