வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை விடுவிப்பதாக கூறி அளவீடு முயற்சி! பலர் சமூகமளிக்காததால் மக்களால்  காணிகளை அளவீடு செய்யவிடாது தடுத்த நிறுத்தம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் வனஜீவராசிகள் திணைக்களம் தம்மால் சுவீகரிக்கப்பட்ட  காணிகள் என கூறி அதனை விடுவிப்பதற்க்காகவென தெரிவித்து அக்கிராம மக்களின் வயல் காணிகள், மற்றும் பயிர் செய்கை காணிகளை அளவீடு செய்ய முயற்சித்துக் வேளை அக்கிராமத்தில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் பலர் சமூகமளிக்காததால் இன்று காணிகளை அளக்க முடியாது என தடுத்து நிறுத்தியுள்ளதுடன் போதிய முன்னறிவிப்பு வழங்கி பிறிதொரு நாளில் அளவீடு செய்யுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களம் காணிகளை அளவீடு செய்வதை இடை நிறுத்தி சென்றுள்ளனர்.
குறித்த அம்பன் கிராமத்தில் 2021 காலபோக நெல் செய்கைக்காக 72 ஏக்கர் செய்கை காணிகளில் நெல் பயிர்கள் செய்கை  மேற்கொள்ளப்பட்டிருந்தது.  குறித்த பகுதி அம்பன் நாகர்கோவில் ஊர் எல்லையிலிருந்து குடத்தனை அம்பன் ஊர் எல்லை வரையான வீதிக்கு தெற்கு பகுதி முழுமையாக தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்களாகும்.
அம்பன் பகுதி விவசாய நிலங்கள் சுவீகரிப்பு தொடர்பில் இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியாகாத நிலையில் காணிகளை விடுவிப்பதற்காக என வன ஜீவராசிகள் திணைக்களம் அளவீடு செய்வது பிரதேச மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews