பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்.நகரில் கண்டனப் போராட்டம்..!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை கண்டித்து இன்று காலை 10 மணியளவில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க தமிழர் தேசத்தை அங்கீகரி, எமது இனத்தை அழிக்க பெற்ற ஆயுதங்களுக்கு தமிழர்கள் பொறுப்பாளிகளா,

அன்று ஆயுதத்தால் அழித்தாய் இன்று பட்டினியால் அழிக்கிறாய் தமிழர் தேசத்தை அங்கீகரித்தால் மட்டுமே புலம்பெயர் தமிழர்கள் முதலிடுவர் போன்ற கோசங்கள் எழுப்பபட்டது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோரும் கட்சி உறுப்பினர்களும்

கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews