சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரரை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைது….!

சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரரை ராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்ததுள்ளனர்
 கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு வெடித்ததில் அவரது இளைய சகோதரர் சிவலிங்கம் திலகரிஷன் படுகாயமடைந்தார்.
இத்தாவில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற கபிரியேல் முத்துலிங்கம் என்பவரின் அறிவுறுத்தலின் பேரில், பாதிக்கப்பட்ட நபர், ரமேஷுக்கு வெடிமருந்துகளை வெட்டி விற்பனை செய்துள்ளார். யுவராஜ் இறந்ததையடுத்து, ரமேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் 23.03.2022 அன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், பளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு இரகசியமாகச் சென்ற வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews