வீட்டில் கதவு ஒன்றை பொருத்திக் கொண்டிருந்த 22 வயதான இளைஞன் பலி! |

மட்டக்களப்பு – கொக்குவில் திராய்மடு பகுதியில் கதவு ஒன்றினை பொருத்துவதற்காக துளையிடும் கருவியை பயன்படுத்திய 22 வயதான இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திராய்மடு 5ம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்னும் 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் கதவு ஒன்றை பொருத்துவதற்காக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருந்த துளையிடும் கருவியின் வயரானது கதவில் இணைக்கப்பட்டிருந்த தகரத்தில் பட்டிருந்த நிலையில்

குறித்த தகரத்தில் துளையிடும் கருவியினால் துளையிட முயற்சித்தபோது குறித்த இளைஞருக்கு மின்சாரம் தாக்கப்பட்டுள்ளது.மின்சாரம் தாக்கப்பட்டர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும்

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்

உயிரிழந்த இளைஞன் கடந்த ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்திபெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews