கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து – தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்த சிரேஸ்ட சட்டத்தரணி

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் பாரிய விபத்து சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்துள்ளது.

எனினும் காரில் பயணித்த சிரேஸ்ட சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்தார்.

இதன் போது ஏ 9 வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடியிருந்த இளைஞர்களின் உதவியுடன் பொலிசார் சீர்செய்தனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews