வடமராட்சி கிழக்கில் போலீஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்துடனேயே மண்ணெண்ணைய  விநியோகம்….!

வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மண்ணெண்ணெய்  நிரப்பு நிலையத்தில் போலீஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்துடனேயே மண்ணெண்ணைய  விநியோகம் இடம்பெற்று வருகிறது.
ஒவ்வொரு மீனவருக்கும் தலா 20 லிட்டர் வீதமே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க  எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடற்றொழிலாளர்களுக்கும், சமாச ஊழியர்களுக்கும் இடையில் இடம் பெற்ற  முரண்பாடுகளை அடுத்தே இன்றையதினம் போலீஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டு  மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

நேற்றைய தினம் இடம் பெற்ற முரண்பாடு தொடர்பாக தெரியவருவதாவது.
நடப்பாண்டிற்கான படகு அனுமதிப்பத்திரம் புதிப்பித்து வைத்துளதளவர்களுக்கே மண்ணெண்ணெய் வழங்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளருக்கு பணித்திருந்த நிலையில் அவர்களுக்கே மண்ணெண்ணெய் வழங்க ஏற்பாடகியிருந்துள்ளது.
 ஆனால் நடப்பாண்டில் அதிகளவானோர் இன்னும் படகு உரிமத்தை புதிப்பிக்கவில்லை. இதனாலேயே  முரண்பாடு இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் க.சண்முகநாதன் உடனடியாக தலையிட்டு  வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர்களுடன் உரையாடி சமாசத்தின் கீழுள்ள 15 சங்கங்களும், படகில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை உறுதிப்படுத்தி பட்டியல் சமாசத்திற்க்கு அனுப்புமாறு முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இன்று மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது.படகு உரிமத்தை புதுப்பிக்க சுமார் பத்தாயிரம் வரை செலவாகும் என்பதும் குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews