யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து! ஒருவர் பலி, 22 பேர்வரையில் படுகாயம்.. |

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர்.

முன்னால் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்லவதற்கு முயற்சித்தபோது பின்னால் சென்ற தனியார் பேருந்து முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி தடம் புரண்டுள்ளது.

இந்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்களில் அறியமுடிகின்றது. விபத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

22 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் காயமடைந்தவர்களை அதில் சென்ற மக்கள் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Recommended For You

About the Author: admin