இரும்பு வியாபாரிகளால் மொட்டையடிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட பிரதமர் மஹிந்த..! காரணம் என்ன?

போர் காரணமாக மூடப்பட்டு பின்னர் செயலற்றுப்போன யாழ்.காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை இரும்பு வியாபாரிகள் மொட்டையடித்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நேற்றய தினம் பார்வையிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் பலகோடி பெறுமதியான. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்பு பொருட்கள் தென்னிலங்கை வியாபாரிகளால் வெட்டிச் செல்லப்பட்டது. பின்னர் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறித்த சிமெந்து ஆலையை மீள ஆரம்பிப்பது தொடர்பில்  கவனம் செலுத்தப்பட்ட நிலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினால் அதனை செயற்படுத்த முடியவில்லை.

கடந்த 2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் எஞ்சிய கட்டிடங்களை எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.

Recommended For You

About the Author: admin