கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன்….!

மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூலிக்கு ஆள்வைத்து தனது தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13)ம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாற்று பிரதேசத்தில் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) ம் திகதி கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இவரின் 22 வயதுடைய சிந்துஜன் எனும் மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் தனது மாட்டுப்பட்டியிலுள்ள மாடுகளை திருடிவிற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும்,மகனுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனையடுத்து மகன் தனது தந்தையை கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் கடந்த முதலாம் திகதி (1-3-2022) தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக அவனிடம் பேரம் பேசியுள்ளார்.

இதன்போது தந்தையான பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட மகனின் நண்பனை கண்ட பரசுராமன் அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும் இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர்.

இதன்போது நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து பேரம் பேசிய பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பணை தேடி 14ம் திகதி திங்கட்கிழமை கிரான் பகுதிக்கு சென்று பணத்தினை வாங்கிச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: admin