கொழும்புத்துறையில் அளவுக்கதிகமான போதைப் பாவனையால் இளைஞன் மரணம்!

அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப் பொருளை அளவுக்கதிகமாக எடுத்துக் கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 4 வருடங்களாக போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞன் பணம் கேட்பது மற்றும் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை போதையில் வீட்டுக்கு வந்த குறித்த இளைஞன் நெஞ்சை பிடித்தவாறு நிலத்தில் விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையில் அளவுக்கதிகமான ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்டமையே மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி தெல்லிப்பழை – கட்டுவன் பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் அளவுக்கதிகமான போதைப் பொருளை எடுத்துக் கொண்டதால் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்குள் மேலும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin