இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறிய இலங்கை மீனவர்கள் கைது!

இந்திய கடல் பகுதிக்குள், அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில், 6 இலங்கை மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம், இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்களின் விசைப்படகு ஒன்று கைப்பற்றப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதன்போது குறித்த படகிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களும், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை, தூத்துக்குடிக்கு அழைத்துச்சென்ற கடலோர காவல் படையினர், தருவைக்குளம் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி இலங்கை மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin