சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குருபூசை தினமும், ஊடகவியலாளர் தில்லைநாதன் கௌரவிப்பும்…..!

சதாவதானி நா.கதிரவேற்பிள்ளையின் 115 வது குரு பூசை தினமும், ஊடகவியலாளர் சி.திலஸலைநாதன் கௌரவிப்பு நிகழ்வும் சதாவதானி சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது.
மேலைப் புலோலி சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை சனசமூக நிலையத் தலைவர் நடராசா நிறஞ்சன் தலமையில் பிற்பகல் 6:30 க்கு ஆரம்பமான நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் வே.வேல்நந்தன் உரை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து 54 ஆண்டுகளுக்கு மேலாக ஊடக பணியாற்றிய ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் மலர்மாலை அணிவிக்கப்பட்டும், பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசு வழங்கியும் மதிப்பளிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சதாவதானி கதிரவேற்பிள்ளை  சனசமூக நிலைய நிர்வாகிகள்,உறுப்பினர்கள், முன்பள்ளி சமூகம், மேலைப்புலோலி கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin