சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு.

ரஷ்யா உடனடியாக உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் இராணுவப் பிரிவுகள் அல்லது அதன் ஆதரவு படைகளில் உள்ளவர்கள், எந்த இராணுவ நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் சர்ச்சையை மோசமாக்கும் அல்லது அதைத் தீர்ப்பதை கடினமாக்கும் எந்தவொரு செயலையும் தவிர்க்க வேண்டும்.

இதேவேளை ரஷ்யாவின் இராணுவ முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள், சர்வதேச சட்டக் கடமைகளை ரஷ்யா, பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இது “முழுமையான வெற்றி” என்றும், இந்த உத்தரவை ரஷ்யா புறக்கணித்தால் அது மேலும் தனிமைப்படுத்தப்படும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin