ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவிடம்! புதிய வகை விமானத்தை களமிறக்கிய புடின்…!

ரஷ்ய – உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா பல வகையான அதிநவீன சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்று வரை களமிறக்கவில்லை என பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் (பிரபாகரன்) அரூஸ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரஷ்யாவின் ஆயுதங்கள் பலவீனமானவை, நவீனமானவை என்ற விம்பத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஐரோப்பாவின் எதிர்காலம் ரஷ்யாவின் கைகளில் சிக்கியுள்ளதாகவும், ரஷ்யா தற்போது புதிய வகை விமானத்தை களமிறக்கி வருகின்றமையினால் ரஷ்யாவின் நகர்வு குறித்து கணிப்பிட முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin