கோட்டபாயவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க பெண்.

சமகால அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்துள்ள நாட்டு மக்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபயவை வீட்டுக்கு செல்லுமாறு கோரி சமூக வலைத்தளத்தில்  என்ற கோஷம் பகிரப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவரும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். கெல்ஸை நெல்சன் என அமெரிக்க எழுத்தாளரே இவ்வாறு எதிர்ப்பு பதிவு வெளியிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் டுவிட் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நான் #GoHomeGota டுவீட் செய்வேன், ஆனால் நான் அமெரிக்கன் என்பதால், #ComeHomeGota மிகவும் பொருத்தமானதாக இருக்கும். நாட்டை சீரழிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக பல இலங்கையர்கள் நிலைப்பாட்டை எடுப்பதை பார்க்க ஊக்கமளிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இலங்கை சமூக வலைத்தள பயனாளர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Recommended For You

About the Author: admin